1) எவர் கப்ருகளுக்குச் சென்று குல்ஹுவல்லாஹு அஹது என்ற சூராவை 11 தடவை ஓதி அதன் நன்மையை கப்ராளிக்கு சேர்த்தாரோ அவருக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அளவு நன்மை கிடைக்கும் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176- புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)
2) யார் கப்ருஸ்தானுக்குச் சென்று யாஸீன் சூரா ஓதுவாரோ அந்நாளில் அல்லாஹுதஆலா அவர்களின் (வேதனைகளை) இலேசாக்குவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 – புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)
3) யார் தனது தாய் தந்தையர்களில் இருவரையோ அல்லது அவர்களில் ஒருவரையோ ஸியாரத் செய்து அவ்விடத்தில் யாஸீன் ஓதுகிறாரோ அவரின் பாவங்கள் பொறுக்கப்படுகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 –புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)
4) எவராவது கபுருஸ்தானத்திற்கு சென்று ஸூரத்து யாஸீன் ஓதினால் அல்லாஹுதஆலா அந்த கபுருவாசிகளைத் தொட்டும் வேதனையை இலேசாக்குவான். மேலும் அந்த கப்ருஸ்தானில் அடங்கி இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையளவுக்கு அவருக்கு நன்மைகள் இருக்கின்றது என்று நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஷரஹுல் ஸுதூர் பக்கம் 418 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி லில் மைய்யித்தி)
5) உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நல்லடக்கம் செய்துவிடுங்கள். மேலும் அவரின் தலைமாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பப்பகுதியையும், அவரின் கால்மாட்டில் பகரா சூராவின் கடைசிப் பகுதியையும் ஓதுங்கள் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(மிஷ்காத் ஹதீது எண்: 1717 பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்) பைஹகி பாகம் 7 பக்கம் 16 ஹதீது எண் 9294)
6) உங்களில் இறந்தவர்கள் மீது யாஸீன் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 466 ஹதீஸ் எண் 1448 பாபு மா ஜாஅ பீ மாயுக்காலு இந்தல் மரீழி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் பாகம் 3 பக்கம் 191 ஹதீது எண் 3121 பாபுல் கிராஅத்தி இந்தல் மய்யித்தி கிதாபு ஜனாயிஸ், அஹ்மது பாகம் 5 பக்கம் 26, மிஷ்காத் பக்கம் 141 ஹதீது எண் 1622 பாபு மா யுகாலு இந்த மன் ஹழரஹுல் மௌத்து கிதாபுல் ஜனாயிஸ்)
7) யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று மஃகில் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத் பக்கம் 26, பைஹக்கி அபுல் ஈமான் பாகம் 2 பக்கம் 479 ஹதீது எண் 2458, மிஷ்காத் பக்கம் 189 ஹதீது எண் 2178 கிதாபு பலாஇலில் குர்ஆன்)
8) அன்ஸாரி ஸஹாபிகளில் ஒருவர் மரணித்து விட்டால் அவரின் கப்ருக்கு அந்த ஸஹாபாக்கள் பலவாறாக பிரிந்து சென்று அவ்விடத்தில் குர்ஆன் ஓதுபவர்களாக இருந்து கொண்டிருப்பார்கள்.
(கிதாபுர் ரூஹ் பக்கம் 14 அகீதத்துஸ்ஸுன்னா பக்கம் 304 ஷரஹுல் ஸுதுர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மய்யித்தி…)
9) அன்ஸாரி ஸஹாபாக்கள் இறந்தவர்களுக்காக பகரா சூரா ஓதுபவர்களாக இருந்தார்கள். (முஸன்னப் இப்னி ஷைபா பாகம் 3 பக்கம் 121)
10) அன்ஸாரி ஸஹாபாக்களின் ஸுன்னத்தாகிறது அடக்கம் செய்வதற்காக மய்யித்தை சுமந்து செல்லும் நேரத்தில் அதோடு ஸூரத்துல் பகராவை ஓதிக் கொண்டு செல்வதாகும்.
(அத்தத்கிரா பக்கம் 111 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இந்தல் கப்ரி ஹாலத் தபனி வபஃதஹு)
11) தனது கப்ருக்கு பக்கத்தில் ஸூரத்துல் பகரா ஓத வேண்டும் என்று ஸய்யிதினா அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு இட்டார்கள்.
(அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 107 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இன்தல் கபுரி ஹாலத்தத் தபனி வ பஃதஹு)
12) எவர் கப்ருக்குச் சென்று அல்ஹம்து ஸூராவையும் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் அல்ஹாக்கு முத்தகாதுரு என்ற ஸூராவையும் ஓதி அதன் பிறகு இறiவா! உமது கலாமிலிருந்து நான் இப்போது ஓதிய ஸூராக்களின் தவாபை முஃமினான கப்ருவாசிகளுக்கு ஆக்கிவிட்டேன் என்று சொல்வாரானால் அவருக்காக அந்த கபுருவாசிகள் அல்லாஹ்வின்பால் பரிந்துரை செய்பவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று ஸய்யிதினா அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஷரஹுல் ஸுதூர் பக்கம் 418 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி லில் மைய்யித்தி)
13) தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை இத்தரணிக்கு தொகுத்து தந்தவர்களில் தலைமைத்துவம் பெற்றவர்களான இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஷைகாகிய முஹம்மது பின் இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பத்தாயிரத்துக்கும் மேலாக திருக்குர்ஆன் ஓதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கத்தம் தமாம் செய்ததாக துஹ்பா பாகம் 9 பக்கம் 368ல் வந்துள்ளது.
14) ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ருக்கருகே நடந்து செல்லும்போது தமது தோழர்களை நோக்கி இவ்விரு மண்ணறைவாசிகளில் ஒருவர் சிறுநீரை சுத்தம் செய்வதில் அசட்டையாக இருந்ததற்காகவும், மற்றொருவர் புறம் பேசித் திரிந்ததற்காகவும் வேதனை செய்யப்படுகின்றனரே அன்றி பெருங்குற்றங்கள் செய்த காரணத்தினால் அல்ல எனக் கூறிவிட்டு அருகிலிருந்த பேரீத்த மரத்தின் குச்சியொன்றை எடுத்து அதனை இரண்டாகப் பிளந்து ஒரு கப்ருகள் மீது நாட்டினார்கள். இதற்குரிய காரணம் வினவப்பட்ட போது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இக்குச்சிகள் காயும்வரை (அவை செய்யும் தஸ்பீஹின் காரணத்தால்) அவர்களது வேதனை எளிதாக்கப்படும் என்று கூறினார்கள்.
(புஹாரி ஹதீது எண் 216 பாபுன் மினல் கபாஇரி – கிதாபுல் உலூஇ, புஹாரி ஹதீது எண் 218 பாபு மாஜாஅ பீ ஙஸ்லில் பௌலி கிதாபுல் உலூஇ, புஹாரி ஹதீது எண் 1361 பாபுல் ஜரீதத்தி அலல் கப்ரி கிதாபுல் ஜனாயிஸ், புஹாரி ஹதீது எண் 1378 பாபு அதாபில் கப்ரி மினல் ஙீபத்தி வல் பௌலி கிதாபுல் ஜனாயிஸ, புஹாரி ஹதீது எண் 6052 பாபுல் ஙீபத்தி கிதாபுல் அதப், புஹாரி ஹதீது எண் 6055 பாபுன் அன் நமீமத்து மனில் கபாயிரி கிதாபுல் அதப், முஸ்லிம் ஹதீது எண் 292 பாபுத் தலீலி அலா நஜாஸத்தில் பௌலி கிதாபுத் தஹாரா, திர்முதி ஹதீது எண் 70 பாபு மாஜாஅ பித்தஷ்தீதி பில் பௌலி அப்வாபுத் தஹாரா, இப்னுமாஜா ஹதீது எண் 347 பாபுன் பித்தஷ்தீதி பில் பௌலி கிதாபுத் தஹாரா, அபூதாவூத் ஹதீது எண் 20 பாபு ஆதாபில் கலாஇ கிதாபுத் தஹாரா, மிஷ்காத் ஹதீது எண் 338 பக்கம் 42 பாபு ஆதாபில் கலாஇ)
குறிப்பு 1: உயிரற்ற உணர்வற்ற ஒரு பேரீத்தம் குச்சி ஓதுகின்ற தஸ்பீஹ் மண்ணறைவாசிகளுக்கு போய்ச் சேருகின்றது. அதன் மூலம் அவர்களுக்கு வேதனையும் இலேசாக்கப்படுகிறது என்பது இப்போது கூறப்பட்ட ஹதீஸின் மூலம் உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டதால் முஃமினான ஒரு மனிதன் ஓதுகின்ற குர்ஆனின் நன்மைகள் மண்ணறைவாசிகளுகு;கு போய்ச சேர்ந்து அதன் மூலம் அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படுகிறது என்பது உண்மையிலும் உண்மையாகவும் ஏற்றத்திலும் ஏற்றமாகவும் ஆகிவிடும் அல்லவா? எனவேதான் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதலாம் என்பதற்கும் அதன் மூலம் அவர்கள் பயன் அடைகிறார்கள் என்பதற்கும் கூறப்படுகின்ற ஆதாரங்களில் மேற்கூறப்பட்ட ஹதீஸையும் உலமாக்கள் சேர்த்துள்ளார்கள் என்று கீழ்வரும் கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(பத்ஹுல் பாரி புகாரி ஹதீது எண் 216 க்குரிய விளக்கவுரை, உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 119 புஹாரி ஹதீது எண் 216க்குரிய விளக்கவுரை, ஷரஹ் முஸ்லிம் முஹ்ஸிம் ஹதீது எண் 292க்குரிய விளக்கவுரை, மிஷ்காத் 42ம் பக்கத்தில் உள்ள 8வது ஓரக்குறிப்பு ஹதீது எண் 338க்குரிய விளக்கவுரை, அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 101 பாபு மாஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி)
15) மேலும் ஸய்யிதினா புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது கப்ரில் இரண்டு பேரீத்தம் பாலைகளை வைக்குமாறு வஸியத்து செய்தார்கள். (ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 420 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி என்ற பாடத்திலுள்ள பஸ்லு)
குறிப்பு 2: இப்போது கூறப்பட்ட 15 ஹதீஸ்களில் முந்திய 3 ஹதீஸ்கள் புஹாரி ஷரீபுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கவுரைகளில் மிகவம் பிரசித்திப் பெற்ற மூன்றில் ஒன்றான உம்தத்துல் காரி(ஐனி) என்ற கிரந்தத்தில் இடம் பெற்றவைகளாகும். ஆகவே இதுவரை கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் மரணித்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவது ஆகுமான காரியம் என்றும் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் செயல்படுத்தி வந்த சுன்னத்தான காரியம் என்றும் தெளிவாக அறிந்து கொள்வோமாக! |