Imam P.S. Shahul Hameed Siraji : Masjidhun Noor, Maduvinkarai, Guindy, Chennai
Bismillah hir Rahman nir Raheem  
 
 
Homepage Join me at Facebook Contact Imam P.S.Shahul Hameed Siraji
Jumma BayanWeekly BayanLadies BayanRamadhan BayanSpecial BayanLatest Imam ProgramsQuestions & AnswersUseful Articles
Maduvinkarai Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Read Al-Quran with Tamil Meaning & Recitation
Imam Latest Programs
  பயனுள்ள இஸ்லாமிய தொகுப்புகள் << மற்ற தொகுப்புகள்
இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்வது அவர்களுக்கு போய்ச் சேராது என்று நமது ஷாபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னதாக வந்திருக்கும் சொல்லின் விளக்கம் என்ன?

1) நமது ஷாபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கூறியவாறு சொன்ன சொல்லின் எதார்த்தமான பொருளாகிறது குர்ஆன் மய்யித்தின் முன்னிலையில் ஓதப்படாத நிலையிலேயும் அல்லது தான் ஓதிய குர்ஆனின் நன்மையை மய்யித்திற்கு சேர்ப்பிக்கிறேன் என்று நிய்யத்து வைத்து துஆ ஓதப்படாமல் இருக்கும் கட்டத்திலுமாகும். பொதுவாக அல்ல என்று இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (துஹ்பா பாகம் 7 பக்கம் 74 பஸ்லுன் பீ அஹ்காமின் மஃனவிய்யத்தின் கிதாபுல் வஸாயா)
(அதாவது ஒருவன் ஓதிய ஓதலின் நன்மைக்கு அவனே சொந்தக்காரனாக இருக்கிறான் என்பதால் நான் ஓதிய குர்ஆனின் நன்மையை இன்ன மய்யித்திற்கு ஹதியா செய்கிறேன் என்று அவன் சொல்ல வேண்டும் அல்லது அவன் மனதிலே மய்யித்தை நினைத்து நிய்யத்து செய்து ஓத வேண்டும். இல்லாவிட்டால் சேராது என்பதாகும்.)

2) மேலும் இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி துஆ செய்வது முஸ்தஹப்பான காரியம் என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களே தாங்கள் எழுதிய அல் உம்மு என்ற கிதாபில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். (அல் உம்மு பாகம் 1 பக்கம் 322 பாபு அததி கபனில் மைய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்)

3) மேலும் மைய்யித்தை அடக்கி முடிந்தவுடன் குர்ஆனிலிருந்து கொஞ்சத்தை ஓதுவது விரும்பத்தகுந்ததாகும். குர்ஆன் பூராவையும் முழுமையாக ஓதி முடிப்பது மிக்க அழகான காரியமாக இருக்கும் என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் மாணவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள் என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிரந்தங்களில் வந்துள்ளது.
(அல் அத்கார் பக்கம் 137 பாபு மாயக்கூலுஹு பஃதத் தபனி, ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆன் லில் மய்யித்தி அவ் அலல் கப்ரி)

4) மேலும் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி நன்மையைச் சேர்ப்பிப்பதை ஷாபி மத்ஹபைச் சார்ந்த பிரசித்தி பெற்ற இமாம்களான இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்கள் எழுதிய மின்ஹாஜ் என்ற கிதாபிலும் (பாகம் 3 பக்கம் 202) இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் துஹ்பா என்ற கிரந்தத்திலும் (பாகம் 3 பக்கம் 202 பஸ்லுன் பித்தபனி கிதாபுல் ஜனாயிஸ்), இமாம் ரமளி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் பதாவா ரமலி என்ற நூலிலும் (பாகம் 1 பக்கம் 430)

5) ஸுயூத்தி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் அல்ஹாவி லில் பதாவா என்ற நூலிலும் (பாகம் 2 பக்கம் 194) ஆகுமென்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலம் அது போன்றே ஷாபி மதுஹபைச் சார்ந்த மாணவர்களுக்கு அரவி மத்ரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படுகின்ற பத்ஹுல் முயீன் (பாபுன் பில் வஸிய்யத்தி –மத்லபுன் பில் ஈஸாயி) என்ற கிதாபிலும் வந்திருக்கின்றது. மேலும் கபுறுகளுக்குச் சென்றால் பாத்திஹா சூராவயும் (ஸூரத்துல் பலக், ஸூரத்துந் நாஸ் என்ற) முஅவ்விதத்தைனியையும் குல்ஹுவல்லாஹு அஹதையும் ஓதி அதன் நன்மையை கபுராளிகளுக்கு சேர்த்து வைய்யுங்கள். கண்டிப்பாக அது அவர்களைச் சென்றடையும் என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பித்தியோக மாணவராகிய இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கின்ற செய்தி இங்கு கவனிக்கத் தக்கதாகும். (மிர்காத் பாகம் 2 பக்கம் 351, இஆனா பாகம் 2 பஸ்லுன் பிஸ் ஸலாத்தி அலல் மைய்யித்தி)

6) மேலம் ஷாபி மத்ஹபில் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான இஸ்ஸு இப்னு அபதுஸ்ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பூவுலகத்தில் வாழந்து கொண்டிருக்கும் போது இறந்தவர்களுக்காக ஓதப்படும் குர்ஆனின் நன்மை இறந்தவர்களுக்கு போய்ச் சேராது என்று பத்வா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த போது அவர்களின் மாணவர்களில் சிலர் அவர்களைக் கனவில் கண்டு இறந்தவர்களுகு;கு குhத்ஆன் ஓதுவதின் நன்மை அவர்களுக்க போய்ச் சேராது என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்களே அது பற்றி இப்போது உங்களின் கருத்து என்னவென்று கேட்டார்கள். அதற்கவர்கள் நான் துன்யாவில் இருக்கும் போது தான் அப்படிச் சொல்பவனாக இருந்தோன். இப்போது நான் அந்தக் கருத்திலிருந்து (ருஜுஃ) வாபஸ் ஆகிவிட்டேன். ஏனெனில் அது விஷயத்தில் அல்லாஹு தஆலா மிக தயாளம் உள்ளவனாக இருக்கின்றான் என்பதையும் நிச்சயமாக குர்ஆன் ஓதிய நன்மைகள் மய்யித்தைப் போய்ச்சேருகிறது என்பதையும் நன்றாக கண்டு கொண்டேன் என்று கூறினார்கள்.
(ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனில் லில் மய்யித்தி அவ் அலல் கபுரி, அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 111 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இன்தல் கபுரி)

7) மேலும் மய்யித்திற்காக துஆ செய்வது எப்படி மய்யித்தை சென்றடைகிறதோ அது போன்றே குர்ஆன் ஓதுவதும் மய்யித்தை சென்றடைகிறது என்றும் அது மய்யித்தினுடைய பிள்ளைகளிலிருந்து அவானின் மனைவியிலிருந்தும் நண்பர்களிலிருந்தும் இன்னும் ஏனைய முஃமின்களிலிருந்தும் ஸதக்காவாக இருக்கின்றது என்றும் (அத்தத்கிரா பக்கம் 108) கபுரு ஸியாரத் செய்பவர்கள் குர்ஆனிலிருந்து கொஞ்சத்தை ஓதி கபுராளிக்கு சேர்ப்பது அவர்களுக்கு செலுத்தும் காணிக்கையாக இருக்கின்றது என்றும்;(அத்தத்கிரா பக்கம் 103) ஸதகாவின் நன்மை எப்படி மய்யித்திற்கு போய்ச் சேருகிறதோ அப்படியே குர்ஆன் ஓதுதல், துஆ செய்தல், இஸ்திஃபார் செய்தல் ஆகியவைகளும் அவர்களைச் சென்றடையும் . ஏனென்றால் அவைகள் அனைத்துமே ஸதக்காகவே இருக்கின்றது. மேலும் ஸதக்கா என்பது பொருளுக்கு மட்டும் சொந்தமில்லை. ஏனெனில் ஒவ்வொரு தஸ்பீஹும் ஸதக்காவாகும். ஒவ்வொரு தக்பீரும் ஸதகாக்காவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஸதகாவாகும். (முஸ்லிம் ஹதீது எண் 270 – 84 பாபு இஸ்த்திஹ்பாபி ஸலாத்தில் லுஹா கிதாபு ஸலாத்தில் முஸாபிரீன்) ஒவ்வொரு நல்ல வார்த்தைகளும் ஸதக்காவாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி ஹதீது எண் 2989 பாபு மன் அகத பிர்ரிகாபி வனஹ்விஹி கிதாபுல் ஜிஹாத்) என்றும் அத்தத்கிரா என்ற கிரந்தத்தில் (பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி) வந்துள்ளது.

ஆகவே இதுவரை கூறப்பட்ட விளக்கங்களின் மூலம் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்வது மற்ற மத்ஹபுகளில் சுன்னத் என்று இருப்பது போல ஷாபி மத்ஹபிலும் சுன்னத்தான காரியம் என்பதை அறநிது கொள்வதுடன் ஷாபி மத்ஹபைச் சார்ந்தோர் ஷாபி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சொல்லுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கின்றனர் என்பதையும் சன்மார்க்கத்தை சரியாக விளங்காத சகோதரர்கள் அறிந்து கொள்வார்களாக!

 
முகப்பு | ஜும்மா பயான் | வாராந்திர பயான் | பெண்கள் பயான் | ரமலான் பயான் | சிறப்பு பயான் | நிகழ்ச்சிகள் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | பேஸ்புக்
Home | Jumma Bayan | Weekly Bayan | Ladies Bayan | Ramadhan Bayan | Special Bayan | Latest Programs | Questions & Answers | Contact Imam | Facebook
பார்வையாளர் எண்ணிக்கை: (தற்போது வரை)
Copyrights 2014 & Beyond - Imam P.S.Shahul Hameed Siraji
Designed & Maintained by: ‘Jumaana’ Syed Ali
Maduvinkarai Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
1 2 3 4 5 6 7 8